டி20 கிரிக்கெட்டில் 10 ரன்னில் ஆல் அவுட்டான மங்கோலியா: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 2026-ம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது.
டி20 கிரிக்கெட்டில் 10 ரன்னில் ஆல் அவுட்டான மங்கோலியா
இதை எதிர்பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில் இப்பொழுது இந்த தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று சிங்கப்பூர், மங்கோலியா அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று போட்டி மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற சிங்கப்பூர் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் இறங்கிய மங்கோலியா வீரர்கள் மின்னல் வேகத்தில் விக்கெட்டை இழந்தது.
Also Read: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!
அதாவது 10 ஓவரில் 10 ரன் எடுத்து ஆல் அவுட் ஆகி, இதுவரை டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ரன்னில் சுருண்ட அணி என்ற சாதனையை மங்கோலியா சமன் செய்தது. மேலும் இந்த போட்டியில் சிங்கப்பூர் சார்பில் பவுலிங் போட்ட பரத்வாஜ் கிட்டத்தட்ட 6 விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார் . இதை தொடர்ந்து ஆடிய சிங்கப்பூர் ஒரு விக்கெட்டுக்கு 13 ரன் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. Mongolia team all out for 10 runs in mens t20 cricket
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை