பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ்: புதுச்சேரி மணவெளி சட்டப்பேரவை தொகுதி அபிஷேகபாக்கம் பகுதியில் உள்ள சேத்திலால் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் மற்றும் மழை அங்கிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் எம் எல் ஏ-வும், சட்டப்பேரவைத் தலைவருமான செல்வம் கலந்து கொண்டு வழங்கினார். இதையடுத்து அங்கு படித்த மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக முக்கிய அறிவிப்பை வழங்கினார்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ்
அதாவது இந்த வருடம் நடைபெற இருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சேத்திலால் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ – மாணவியரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றால் ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.10,000 தனது சொந்த பணத்தில் இருந்து ஊக்கத் தொகையாக வழங்குவேன் என அறிவித்தார். puducherry speaker selvam
Also Read: டி20 கிரிக்கெட்டில் 10 ரன்னில் ஆல் அவுட்டான மங்கோலியா – சிங்கப்பூர் அணிக்கு கிடைத்த அபார வெற்றி!!
இதை கேட்ட மாணவர்கள் ஆனந்த மழையில் இருந்து வருகின்றனர். மேலும் இந்த மாதம் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற இருப்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை