நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை பெருநகரில் 1519 விநாயகர் சிலைகள் வைக்க தற்போது காவல்துறை சார்பில் சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
விநாயகர் சதுர்த்தி விழா :
சென்னை பெருநகரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 1519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட காவல்துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் நாளை விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை பெருநகரில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும், வழிபாடுகள் செய்வதற்கும் அதன் பின்னர்
அவற்றை நீர் நிலைகளில் கரைப்பதற்கும் உயர்நீதிமன்றம் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தல்படியும்,
இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியினரின் தடையில்லா சான்றுகளுடன் காவல்துறை அறிவித்த கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலைகளை நிறுவ,
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் அவர்களின் உத்தரவின்பேரில், கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. Vinayagar Chaturthi Festival Celebration 2024
வினேஷ் போகத் – பஜ்ரங் புனியா காங்கிரசில் இணைந்தனர் – ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு !
கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் :
அந்த வகையில் சென்னை பெருநகர காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி வழிபாடுகள் செய்யவும்,
சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் 1519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்தும்,
அத்துடன் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அவ்வப்போது போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்தும் வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அனைத்து விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.