GOAT திரைப்படத்தின் முதல் நாள் வசூல் - தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !GOAT திரைப்படத்தின் முதல் நாள் வசூல் - தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

தற்போது திரையரங்குகளில் வெளியான GOAT திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல்களை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. அத்துடன் இந்தப் படத்தில் சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். GOAT திரைப்படத்தை அர்ச்சனா கல்பாத்தி தனது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இதனையடுத்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வியாழக்கிழமை (செப்.5) திரையரங்குகளில் வெளியானது. GOAT movie first day collection

GOAT திரைப்படம் நிறைய சர்ப்ரைஸ்களும், திரையரங்க அனுபவத்தையும் படம் உறுதி செய்கிறது என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து மற்றொரு தரப்பினர் பலவீனமான திரைக்கதை படத்துக்கு வலு சேர்க்கவில்லை என்கின்றனர்.

நடிகர் விஜயின் GOAT திரைப்படம் இப்படியான கலவையான விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இத்திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் ரூ.126.32 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல் – இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி தகவல்!!

இதற்க்கு முன்னதாக வெளியான விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.140 கோடியை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *