பாரா ஒலிம்பிக் போட்டி 2024: குண்டு எறிதலில் வெண்கலம் வென்ற ஹோகடோ செமா!!பாரா ஒலிம்பிக் போட்டி 2024: குண்டு எறிதலில் வெண்கலம் வென்ற ஹோகடோ செமா!!

பாரா ஒலிம்பிக் போட்டி 2024: தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகரமான பாரீசில்  கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

பாரா ஒலிம்பிக் போட்டி 2024

மொத்தம்  4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி கலந்து கொண்டுள்ளனர். மேலும் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் தொடர் நாளையுடன் (08.09.2024) நிறைவு பெற இருக்கிறது.

இதுவரை இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 17-வது இடத்தில் உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

Also Read: ஆன்மீகச் சொற்பொழிவு சர்ச்சை பேச்சு – விளக்கம் அளிக்க சென்னை வரும் மகா விஷ்ணு!

அதாவது நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான குண்டு எறிதல் F.57 போட்டியில் இந்திய வீரர் ஹோகடோ செமா 14.65 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதே போல் நேற்று நடந்த போட்டியில் பிரேசில் வீரர் தியாகோ பாலினோ டோஸ் சாண்டோஸ் (15.06 மீ) வெள்ளிப் பதக்கமும், ஈரான் வீரர் யாசின் கோஸ் ரவி (15.96 மீ) தங்கப் பதக்கமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு

PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்

குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்

HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *