சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்: தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் முக்கிய பகுதியாக கிண்டி ரேஸ் கோர்ஸ் திகழ்கிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் இன்று கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். அதாவது, கடந்த 1946 ஆம் ஆண்டு இந்த மைதானத்திற்காக 99 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் இந்த ஒப்பந்தம் வருகிற 2045ல் தான் முடிவுக்கு வருகிறது.
சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்
இதற்கிடையில் குத்தகை மாற்றம் செய்யப்பட்ட நிலுவை தொகையை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர்.
இதன் காரணமாக தான் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இன்னும் தெளிவாக சொல்ல போனால், 160 ஏக்கர் கொண்ட இந்த கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சுமார் 80 ஏக்கரில் குதிரை பந்தயங்கள் நடத்தப்பட்டு வந்தன. மேலும் எஞ்சி உள்ள பகுதிகளில் திருமண மண்டபங்கள், நீச்சல் குளங்கள், சொகுசு விடுதிகள் போன்றவை இயங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த குதிரை பந்தயம் நடைபெறும் இடத்திற்கான குத்தகை தொகையை தான் பாக்கி வைத்துள்ளனர். chennai guindy race course ground
Also Read: பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கிடுக்கிப்பிடி உத்தரவுகளை போட்ட தமிழக அரசு!!
அதுவும் பல ஆண்டுகளாக பாக்கி தொகையை செலுத்தாமல் இருந்து வந்ததால், பாக்கி தொகை 820 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த 6ஆம் தேதி கிண்டி ரேஸ் கோர்ஸிற்கு சீல் வைக்க உத்தரவிட்டனர். அதன்படி இன்று சுற்றியுள்ள நான்கு நுழைவு வாயில்களையும் பூட்டி சீல் வைத்துள்ளனர். மேலும் இது குறித்து எந்தவித அசம்பாவிதமும் ஏற்படமால் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை