தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களில் இசை வெளியீட்டு விழா நடத்தக்கூடாது என இயக்குநர் அமீர் தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு செய்வதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
கல்வி நிலையங்களில் இசை வெளியீட்டு விழா நடத்தக்கூடாது
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கல்வி நிலையங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் :
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் தலைமையேற்க அல்லது சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள திரைக்கலைஞர்கள் பங்கு பெறுவது ஏற்புடையதாக இருந்தாலும், மேலும் வணிக நோக்கத்திற்காக தயாரிக்கப்படும் பிரபலமானவர்களின் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களையும், திரைப்பட அறிமுகம் போன்ற விழாக்களையும், Director Amir
கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் நடத்துவது கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு கேடு உண்டாக்கக்கக்கூடியதாகும். இதனையடுத்து திரையரங்குகள் கல்விக்கூடமாக மாற வேண்டுமே தவிர,
கல்விக்கூடங்கள் திரை அரங்குகளாக மாறக்கூடாது என்பதில் மக்களும், அரசும் கவனமாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.
மனைவி ஆர்த்தியை டைவர்ஸ் செய்தார் ஜெயம் ரவி – என்ன காரணம் தெரியுமா? அதிகாரபூர்வமாக வெளிவந்த அறிவிப்பு!
முதலமைச்சரிடம் வேண்டுகோள் :
மேலும் மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும் என்றும்,
அத்துடன் கல்வி நிறுவனங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்று கருத்துரை வழங்க ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சரை நான் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் என்றும் அமீர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகள் :
சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்
பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
டிஜிட்டலில் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 18% வரி
மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்
மதுரை தமுக்கம் புத்தகக் கண்காட்சி விழா