தற்போது தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இணையவுள்ளனர் என்ற தகவல் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்சியை சார்ந்த தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இணையவுள்ளனர் ?
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழக வெற்றிக் கழகம் :
தற்போது நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் பெயரை தேர்தல் ஆணையம் பதிவு செய்து அங்கீகரித்துள்ளது.
மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அறிக்கை வாயிலாக தெரிவித்து இருந்தார்.
அத்துடன் ‘திசைகளை எல்லாம் வெல்லப் போவதற்கான முதற்கதவு திறந்திருக்கிறது. தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கையை தீபம் ஏந்தி தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக தமிழ்நாட்டில் வலம் வருவோம்’ என தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் ஆணையம் அங்கீகாரம் :
இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து,
அடுத்தகட்டமாக நிர்வாகிகளை அறிவிக்க தமிழக வெற்றிக் கழகம் தற்போது தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன் படி அதிமுக மாவட்ட செயலாளர் செஞ்சி ராமச்சந்திரனை கட்சியின் அவைத் தலைவராக கொண்டு வர தமிழக வெற்றிக் கழகம் முடிவெடுத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
ஆனால் இந்த தகவலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார்.
கல்வி நிலையங்களில் இசை வெளியீட்டு விழா நடத்தக்கூடாது – இயக்குநர் அமீர் கருத்து !
பல்வேறு கட்சி தலைவர்கள் இணைவு :
இதனை தொடர்ந்து வரும் 23 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
மேலும் குறிப்பாக அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களாக இருந்த 4 பேர் தவெகவில் இணைந்து மாநாடு மேடையை அலங்கரிக்க இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.