தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: தமிழகம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக நீர் நிலையங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்,
வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய கூடும். chance of moderate rain
Also Read: தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு 2024 – விண்ணப்பிக்க செப்.19 தான் கடைசி – எல்லா மாணவர்களும் Apply பண்ணலாம்!
அதன்படி, இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை