பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி !பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி !

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெற இருப்பதன் காரணமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழல் தாக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தற்போது சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் பரந்தூரில் சுமார் 5,368 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திட்டத்திற்காக பரந்தூர் கிராமங்களைச் சேர்ந்த வளத்தூர், தண்டலூர், சிங்கிலி பாடி, அக்கம்மாப்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அளவீடுகள் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு 2024 – விண்ணப்பிக்க செப்.19 தான் கடைசி – எல்லா மாணவர்களும் Apply பண்ணலாம்!

இதனை தொடர்ந்து பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு அந்த பகுதியில் உள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு சார்பில் சுற்றுச்சூழல் தாக்க அனுமதி கொடுத்துள்ளது. அத்துடன் இதற்கான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *