Home » செய்திகள் » ‘மீலாது நபி’ பொதுவிடுமுறை தேதி மாற்றம் – தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

‘மீலாது நபி’ பொதுவிடுமுறை தேதி மாற்றம் – தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

'மீலாது நபி' பொதுவிடுமுறை தேதி மாற்றம் - தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

இஸ்லாமியர்களின் பண்டிகையான மீலாது நபி பொதுவிடுமுறை தேதி மாற்றம் செய்யப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ஒன்றான மீலாது நபி வரும் செப் மாதம் 16ம் தேதிக்கு பதிலாக 17ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

இறைத்தூதர் முகமது நபியின் பிறந்த நாளை மீலாது நபி என இஸ்லாமிய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொண்டாடி வருகி்ன்றனர்.

மீலாது நபி திருநாளன்று புனித நூலான குரானை வாசிப்பதை முக்கியமான கடமையாக கொண்டுள்ளனர்.

அதிலும் முக்கியமாக ஏழை மக்களுக்கு உணவு, உடைகளையும் தானமாக வழங்கி கொண்டாடி வருகின்றனர். chief kazi salahuddin mohammed ayub khan

இதனை தொடர்ந்து செப்டம்பர் 4ம் தேதி பிறை தென்படவில்லை என்பதால் செப் 6ம் தேதி முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டு,

இந்த ஆண்டு செப்.16ம் தேதி மீலாது நபி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,

தற்போது மறுநாள் செப். 17ம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி – மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி !

அத்துடன் இதுகுறித்து அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் வெளியிட்ட அறிக்கையில், ‘செப்.4ம் தேதி புதன்கிழமை மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை என்றும் ஆகையால்,

வெள்ளிக்கிழமை செப்.6ம் தேதி முதல் ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீலாது நபி செவ்வாய்க்கிழமை செப். 17ம் தேதி கொண்டாடப்படும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top