தமிழகத்தின் பள்ளிகளில் 10 வேலை நாட்கள் குறைப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு குறித்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பள்ளிகளில் 10 வேலை நாட்கள் குறைப்பு
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் நடப்பு (2024 – 2025) கல்வியாண்டில் 10 பணி நாட்களை குறைத்து, திருத்தப்பட்ட புதிய நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதாவது பொதுவாக எல்லா கல்வியாண்டிலும் 210 சராசரி வேலை நாட்களை கொண்டிருக்கும். ஆனால் அதை தற்போது திருத்தி நடப்பு கல்வியாண்டில் வெறும் 220 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவித்து நாட்காட்டி வெளியிடப்பட்டது.
Also Read: 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
சமீப காலமாக பள்ளிகளில் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது அதை அரசாங்கம் ஏற்று, 210 வேலை நாட்கள் இருக்கும் வகையில் புதிய நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள இந்த 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்
ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை
ஆன்லைனில் Dress வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்
TANGEDCO வெளியிட்ட நாளை மின்தடை பகுதிகளின் விவரம்