ஐந்து கலர் வேரியன்ஸ் iPhone 16 சீரிஸ் போன்கள்- சிறப்பம்சங்கள் என்னென்ன? அடியாத்தி விலை இம்புட்டா?ஐந்து கலர் வேரியன்ஸ் iPhone 16 சீரிஸ் போன்கள்- சிறப்பம்சங்கள் என்னென்ன? அடியாத்தி விலை இம்புட்டா?

ஐந்து கலர் வேரியன்ஸ் iPhone 16 சீரிஸ் போன்கள்: இப்போது இருக்கும் காலத்தில் கையில் மொபைல் போன் இல்லாத ஆட்களே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் மக்களின் பெரிய ஆசையாக இருப்பது ஒரு ஐபோன் வாங்க முடியாது என்று தான். இருந்தாலும் பெரும்பாலன மக்கள் ஐபோன் பயன்படுத்தி வருகின்றனர்.

ஐந்து கலர் வேரியன்ஸ் iPhone 16 சீரிஸ் போன்கள்

இப்படி இருக்கையில் உலக முழுவதும் இருக்கும் ஐபோன் பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட iPhoneகள் தொடர்ந்து மக்களிடையே ஒரு வரவேற்பு கிடைத்து வருகிறது.

எனவே அதற்கு ஏற்றாற்போல் அந்நிறுவனமும் பல புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட iPhone-களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட iPhone 16 மற்றும் அதன் வேரியண்ட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதுவும் இந்த iPhone 16 சீரிஸ் மாடல் iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, iPhone 16 Pro Max போன்ற நான்கு  வேரியண்ட்டுகளில் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளியான ஒவ்வொரு மாடலும் பிங்க், அல்ட்ராமரைன்,  பிளாக் அண்ட் வொயிட், டீல் உள்ளிட்ட 5 நிறங்களில் வழங்கி வருகிறது. தற்போது புதிதாக அறிமுகமாகியுள்ள iPhone 16 Series ல் ஆக்‌ஷன் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஐபோன் கேமராவில் போட்டோ வீடியோ எடுப்பதற்கு எளிதாக இருப்பதோடு மேலும் பல்வேறு வசதிகளை வைத்து மிரட்டி உள்ளது.

Also Read: தமிழகத்தின் பள்ளிகளில் 10 வேலை நாட்கள் குறைப்பு – புதிய நாட்காட்டி வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!

மேலும் iPhone 16 மற்றும் iPhone 16 Plus ஆகிய இரண்டு மாடல்களில் 48 எம்பி + 12 எம்பி டூவல் ப்ரைமரி கேமரா இருக்கிறது. அதே போல்  iPhone 16 Pro மற்றும் Pro Max மாடல்களில் 48 எம்பி ஃப்யூசன் கேமரா, 48 எம்பி அல்ட்ரா வைட், 12 எம்பி டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் பிரைமரி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இப்பொழுது ஒரு கேள்வி இந்த ஐபோன் விலை எவ்வளவு என்று. எனவே iPhone 16 சீரிஸ் மாடல்களின் விலை பட்டியலை கீழே கொடுத்துள்ளோம்.

iPhone 16 விலை பட்டியல்:

  • Rs 79,900 (128GB)
  • Rs 89,900 (256GB)
  • Rs 1,09,900 (512GB)

iPhone 16 Plus விலை பட்டியல்:

  • Rs 89,900 (128GB)
  • Rs 99,900 (256GB)
  • Rs 1,19,900 (512GB)

iPhone 16 Pro விலை நிலவரம்:

  • Rs 1,19,900 (128GB)
  • Rs 1,29,900 (256GB)
  • Rs 1,49,900 (512GB)
  • Rs 1,69,900 (1TB)

iPhone 16 Pro Max விலை நிலவரம்:

  • Rs 1,44,900 (256GB)
  • Rs 1,64,900 (512GB)
  • Rs 1,84,900 (1TB)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *