மகாவிஷ்ணுவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி: சமீபத்தில் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மத்தியில் ஆன்மீக சொற்பொழிவு பேசியுள்ளார் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு.
மகாவிஷ்ணுவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி
அப்போது சொற்பொழிவு ஆற்றிய இவர் சில சர்ச்சையான பேச்சுக்களை பேசிய நிலையில் சமூக வலைதளங்களில் வெளியானது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் பற்றி தான் அவதூறாக பேசியதாக குற்றசாட்டுகள் எழுந்தது.
அதுமட்டுமின்றி தொடர்ந்து அவர் குறித்து புகார்கள் எழுந்த நிலையில் சைதாப்பேட்டை காவல்துறை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அவருக்கு வருகிற 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
Also Read: 45வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கம் – தங்கம் வெல்வாரா பிரக்ஞானந்தா?
இதனை தொடர்ந்து மகா விஷ்ணு குறித்து மேலும் விசாரிக்க வேண்டும் என்பதால் அவரை 7 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கேட்டு போலீசார் மனுத்தாக்கல் செய்த நிலையில், மகா விஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்
ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை
ஆன்லைனில் Dress வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்
TANGEDCO வெளியிட்ட நாளை மின்தடை பகுதிகளின் விவரம்