தற்போது ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Aadhaar Card Free renewal
ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஆதார் அட்டை :
தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. அத்துடன் இந்த ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக மட்டுமல்லாது, Aadhaar Card Free renewal date Extension
இந்திய நாட்டு மக்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி தொடர்பான சேவைகள், பத்திரப்பதிவு செய்தல் உள்ளிட்ட முக்கியமான நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான ஆவணமாக கருதப்படுகிறது.
ஆதார் அட்டை அப்டேட் :
மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் சேவைகளை பெறுவதற்கு தனிமனித அடையாளமாக திகழ்வது ஆதார் அட்டை. மேலும் கண்கருவிழி, கைரேகை, பெயர், புகைப்படம், முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் அதில் அடங்கி உள்ளதால் போலிகளை தவிர்த்து தகுதி வாய்ந்த நபர்கள் பயனடைய முடிகிறது.
இதனை தொடர்ந்து ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதாரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
அவ்வாறு 10 ஆண்டுகள் நிறைவடைந்தவர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பப்படும். அவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களில் புதுப்பித்துக் கொள்ளலாம். அப்போது புகைப்படங்கள், கைரேகையை புதிதாக பதிவு செய்து கொள்ளலாம்.
பொங்கல் பண்டிகை 2025 ரயில் டிக்கெட் முன்பதிவு – இன்று முதல் தொடக்கம் IRCTC அறிவிப்பு !
கால அவகாசம் நீட்டிப்பு :
இந்த நிலையில், ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க மேலும் 3 மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 15ந் தேதியுடன் கால அவகாசம் முடிவடையவிருந்த நிலையில், தற்போது வரும் டிசம்பர் 14 வரை கால அவகாசம் நீட்டித்து ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Aadhaar Card Authority announced