தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிணைத்தொகை 10 லட்சம் செலுத்த உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து சில நிபந்தனைகள் வழங்கியுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு :
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (செப்.13) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 6 மாதங்களுக்கு பிறகு அவர் சிறையில் இருந்து வெளியே வருகிறார்.
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயர் மற்றும் பிஎஸ்ஆர் கட்சியைச் சேர்ந்த கே.கவிதா ஆகியோருக்கு பிறகு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஜாமீன் பெற்றுள்ளார்.
சிபிஐ வழக்கு பதிவு :
மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் இந்தாண்டு மார்ச் 21ம் தேதி முதன்முதலாக கைது செய்யப்பட்டார்.
அந்த வகையில் அமலாக்கத் துறையின் காவலில் இருக்கும் போதே, கடந்த ஜூன் 26ம் தேதி சிபிஐ-யும் அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு இடையில், அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஜுலை 12ம் தேதி அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
என்றாலும் கூட சிபிஐ-யால் கைது செய்யப்பட்டிருந்ததால் அவர் தொடந்து திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம் – தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு !
உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு :
அந்த வகையில் உச்ச நீதிமன்ற வலைதளத்தில் செப்டம்பர் 13ம் தேதி விசாரணைக்கு வரும் வழக்குகளின் பட்டியலில் அர்விந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவும் இடம்பெற்றிருந்ததது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று (செப்.13) உத்தரவிட்டது.