திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் ரோட்டோரங்களில், பள்ளங்களில் நீர் தேங்கி காணப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி
இப்படி இருக்கும் சூழ்நிலையில் நீர் தேங்கிய நிலையில் அதில் அதிகமாக கொசு உற்பத்தியானது. இதனால் அச்சம் பட்ட மக்கள் இதனைக் கட்டுப்படுத்த வேண்டி சுகாதார துறையிடம் மனு அளித்த போதிலும், சுகாதாரத்துறை அலட்சியமாக இருந்த நிலையில் அதிக அளவில் கொசு உற்பத்தியாகி பலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. dindigul district
Also Read: 70 வயதுக்கு மேல் இருக்கும் மூத்த குடிமக்களா நீங்கள்? உங்களுக்கு ரூ.5 லட்சம் வரும் – திட்டத்தில் சேருவது எப்படி?
அதாவது அந்த 2 குழந்தைகள் மற்றும் 2 பெரியவர்கள் லேசான காய்ச்சல் உடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நிலையில் நால்வரையும் மருத்துவர் பரிசோதித்து பார்த்ததில் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. பின்னர் டெங்கு வார்டில் நால்வரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்
ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை
ஆன்லைனில் Dress வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்
TANGEDCO வெளியிட்ட நாளை மின்தடை பகுதிகளின் விவரம்