உத்தரபிரதேசம் ஒரு கடையில் ஜூஸில் சிறுநீர் கலப்பு: தற்போது சூரியன் சுட்டெரித்து கொண்டிருக்கும் நிலையில் வெயிலின் சூட்டை தணிக்கும் விதமாக ஜூஸ் குடிப்பது வழக்கம். இப்படி இருக்கையில் ஜூஸில் சிறுநீர் கலந்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் ஒரு கடையில் ஜூஸில் சிறுநீர் கலப்பு
அதாவது உத்தரபிரதேச மாநிலம் காசியாத் இந்திரபுரி பகுதியில் ஒரு ஜூஸ் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடைக்கு தினசரி 100 -க்கும் மேற்பட்ட மக்கள் சென்று வருகின்றனர். இந்த சூழலில் தான் கடந்த வாரம், ஒரு வாடிக்கையாளர் அந்த கடையில் ஜூஸ் வாங்கி சென்றுள்ளார்.
அதை வீட்டிற்கு சென்று குடித்து பார்த்த அவர் அதன் சுவை வேறு மாதிரி இருக்கிறது என்று கடைக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது தான், அவர் வாங்கிய ஜூஸில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டது என தெரியவந்தது. இந்த விஷயம் அக்கம் பக்கம் பரவிய நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கடை உரிமையாளரையும், ஊழியர்களையும் கடுமையாக தாக்கினர்.
Also Read: குரங்கு அம்மைக்கு புதிய தடுப்பூசி – அங்கீகரித்த உலக சுகாதார துறை!!
இதனை தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் இருவரையும் கைது செய்தனர். மேலும் அந்த கடையில் இருந்த சுமார் ஒரு லிட்டர் சிறுநீரையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!
திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி