தற்போது பத்திரப்பதிவு அலுவலகங்களில் செப்16 ல் கூடுதல் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதால் தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் செப்16 ல் கூடுதல் டோக்கன்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பத்திரப்பதிவு :
தற்போது ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் வரும் 16 ம் வருகிறது. எனவே இந்த நாளில் அதிக எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் அன்றைய நாளுக்கு வழக்கமாக 200 டோக்கன் வழங்கப்படும் சார் பதிவாளர் அலுவலகங்களில், 300 டோக்கன் வரை அதிகரித்து வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து பதிவுத்துறை அறிவிப்பை தொடர்ந்து இணையதளத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அத்துடன் அடுத்த மாதம் புரட்டாசி என்பதால்பத்திர பதிவுக்கு மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்பதால், இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவுதுறை அறிவிப்பு :
இதுகுறித்து பத்திரப்பதிவுதுறை வெளியிட்ட செய்திக்குறிப்பு குறிப்பிட்டுள்ளதாவது “சுபமுகூர்த்த தினங்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும்.
எனவே இதனை கருத்தில் கொண்டு அந்த நாட்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
அந்த வகையில் செப்.16ம் தேதி ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதால் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும், இதன் காரணமாக கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
குரங்கு அம்மைக்கு புதிய தடுப்பூசி – அங்கீகரித்த உலக சுகாதார துறை!!
கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு :
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வரும் செப்.16ம் தேதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன்களும்,
அத்துடன் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்களும்,
மேலும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 க்கும் மேற்பட்ட பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண டோக்கன்களுடன்,
அத்துடன் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.