பிரதமர் உருவத்தை சித்தரித்து சாதனை படைத்த மாணவி - அதுவும் 800 கிலோ தானியங்கள் வைத்தா?பிரதமர் உருவத்தை சித்தரித்து சாதனை படைத்த மாணவி - அதுவும் 800 கிலோ தானியங்கள் வைத்தா?

பிரதமர் உருவத்தை சித்தரித்து சாதனை படைத்த மாணவி: பிரதமர் நரேந்திர மோடிக்கு நாளை (செப் 17 -ம்  தேதி) பிறந்த நாள் கொண்டாடப்பட இருக்கிறது. அவரது கட்சித் தொண்டர்கள் வெகுவாக சிறப்பிக்க காத்திருக்கின்றனர். இப்படி இருக்கையில் சென்னை கொளப்பாக்கம் பகுதியில் வாழ்ந்து வருபவர் தான் பிரதாப் செல்வம்.

பிரதமர் உருவத்தை சித்தரித்து சாதனை படைத்த மாணவி

இவரது மனைவி சங்கீரணி. இவர்களுக்கு பிரெஸ்லி சேகினா (Presley Shekinah)( வயது 13)என்ற மகள் உள்ளார். இவர் வேலம்மாள் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.  அந்த சிறுமி நாளை பிறந்த நாள் கொண்டாட இருக்கும் மோடிக்கு வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக ஒரு உலக சாதனையை செய்துள்ளார்.

அதாவது சிறுமி பிரெஸ்லி சேகினா சுமார் 600 சதுர அடி இடத்தில், 800 கிலோ அளவிலான தானியங்களை (World’s Largest Millet Painting) பயன்படுத்தி, கிட்டத்தட்ட 12 மணி நேரம் செயல்பட்டு பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை சித்திரத்தை உருவாக்கி சாதனை படைத்தார். 

Also Read: சிக்ஸர் மூலம் சேப்பாக்கம் சுவரை உடைத்த கோலி – பீஸ்ட் மோடில் தெறிக்கவிட்ட விராட்!!

அந்த சிறுமி சரியாக நேற்று காலை 08:30 மணியளவில் தொடங்கிய நிலையில் இரவு 08:30 மணியளவில் நிறைவு செய்தார். இதுவரைக்கும் எந்த மாணவியும் செய்யாத சாதனையை இந்த சிறுமி செய்துள்ளார். உலகின் மிகப்பெரிய தினை ஓவியம் வரைந்து சாதனை படைத்த இந்த சிறுமிக்கு வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் இருக்கிறது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!

திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *