பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கும் புதிய ரயில் சேவை: வந்தே பாரத் ரயில் சேவைகள் நாடு முழுவதும் அடுத்தடுத்து தொடங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இன்று குஜராத்தில் அகமதாபாத்தில் இருந்து புஜ் என்ற இடத்திற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க இருக்கிறது.
பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கும் புதிய ரயில் சேவை
இந்த ரயிலை இன்று மாலை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். மேலும் இந்த புதிய ரயிலில் எல்லா பகுதிகளிலும் ஏசி உள்ளது. அதன்படி 360 கி.மீ தூரம் பயணிக்கும் இந்த ரயிலில் 2 ஆயிரம் பேர் வரை பயணம் செய்ய கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரயிலில் முன்பதிவு செய்யும் வசதி இல்லை. இப்படி இருக்கையில் தற்போது ஒரு நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இன்று மாலை இந்த ரயிலை தொடங்கி வைக்க உள்ள நிலையில், ரயிலின் பெயர் ‘வந்தே பாரத்’ என்ற பெயரில் இருந்த நிலையில் தற்போது ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என மாற்றப்பட்டுள்ளது.
Also Read: தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!
கடைசி நேரத்தில் இப்படி, பெயர் மாற்றப்படுவதற்கான காரணம் தெரியவில்லை. மேலும் கடைசி நேரத்தில் நமோ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளதும் அனைவரது மத்தியில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!
திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி