கேரளாவில் நிபா வைரஸ்க்கு கல்லூரி மாணவர் பலி: கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக நிபா வைரஸ் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்படி இருக்கையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதித்து கல்லூரி மாணவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ்க்கு கல்லூரி மாணவர் பலி
அதாவது, ” பெங்களூருவில் ஒரு கல்லூரியில் படித்து வந்த ஒரு மாணவன், நிபா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த மாணவனை பெரிந்தல்மண்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அந்த மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள், அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Also Read: பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கும் புதிய ரயில் சேவை – கடைசி நேரத்தில் பெயர் மாற்றம்!
மேலும் இறந்த மாணவரின் வீடு இருக்கும் பகுதி உள்பட சுற்றியுள்ள 5 வார்டுகள் பகுதிகளையும் தீவிர கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த 5 வார்டுகள் பகுதிகளுக்கு வெளிநபர்கள் செல்லவோ, அங்கிருந்து தேவையில்லாமல் வெளியே செல்வதற்கோ தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!
திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி