ஆம் ஆத்மி கட்சி – அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா உறுதி: டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஆம் ஆத்மி கட்சி – அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா உறுதி
இந்நிலையில் நேற்று அவர் விடுதலையான நிலையில், தான் எந்த தப்பும் செய்யவில்லை என்றும் அதை மக்கள் நம்ப வேண்டும். மேலும் மக்கள் தன்னை நேர்மையானவன் என்று சொல்லும்வரை நான் முதல்-மந்திரி பதவியை ஏற்கமாட்டேன். அதுமட்டுமின்றி 48 மணி நேரத்திற்குள் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று தெரிவித்தார்.
அதன்படி அவர் கூறியபடி 48 மணி நேர கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இப்படி இருக்கையில் நேற்று கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு இருந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி 2024: தோல்வியே சந்திக்காமல் பைனலுக்கு சென்ற இந்திய அணி!
எனவே அந்த நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா கடிதம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இன்று காலை சட்டமன்ற கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்திற்குப் பிறகு மதியம் 12 மணிக்கு புதிய முதல்வர் யார் என்று அறிவிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!
திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி