சென்னையில் இனி வெள்ளம் வராது - அரசு கொண்டு அசத்தலான சூப்பர் திட்டம்!சென்னையில் இனி வெள்ளம் வராது - அரசு கொண்டு அசத்தலான சூப்பர் திட்டம்!

தமிழ்நாடு சென்னை – கிளவுட் சீடிங் – பேரிடர் காலம்: கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில முக்கிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக, மழை காலங்களில் அதிக வெயில் கொளுத்துவதும் , வெயில் காலங்களில் மழை கொட்டும் சூழல் நிலவி வருகிறது.

தமிழ்நாடு சென்னை – கிளவுட் சீடிங் – பேரிடர் காலம்

இதனால் வானிலை கடுமையாக பாதிப்படைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக டிசம்பர் மாதம் கடுமையான பேரிடர் காலம்.

அப்போது தமிழகத்தில் ஏகப்பட்ட பகுதிகளில் பலத்த கனமழை பெய்யும். இதனால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். குறிப்பாக சென்னை வெள்ளத்தில் தத்தளிப்பது வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில் இந்த கனமழை வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற இந்திய அரசு கிளவுட் சீடிங்(Cloud Seeding) என்ற முறையை கையில் எடுத்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் தேவையான நேரத்தில் மழை பெய்ய வைக்கவும், மழையை நிறுத்தவும் முடியும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இது குறித்து மகாராஷ்டிரா மற்றும் சில பகுதிகளில்  ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also Read: அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா உறுதி – புதிய முதல்வர் யார்? 12 மணிக்கு அறிவிக்கும் ஆம் ஆத்மி கட்சி!

ஆய்வு வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த 5  ஆண்டுகளுக்குள் நம்மால் வானிலையை கட்டுப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி “Mausam GPT” என்ற வானிலை முன்னறிவிப்பு வழங்கும் ஆப்பையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த செயலி மூலமாக குரல் மற்றும் எழுத்து வடிவில் வானிலை முன்னறிவிப்புகளை நாம் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்திற்காக 2 ஆண்டுகளில் 2000 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!

திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *