உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் - விமானம் மூலம் சென்னை வருகை !உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் - விமானம் மூலம் சென்னை வருகை !

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மீட்கப்பட்டவர்கள் விமானம் மற்றும் ரயில் மூலம் சென்னை வருகை.

உத்தரகாண்ட் மாநிலத்தின் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்குத் தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து தவாகாட் – தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புனித பயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மலைப்பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ள கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்திருந்தார்.

மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க உத்தராகண்ட் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டதன் அடிப்படையில்,

நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்களும் ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

டெல்லியின் புதிய முதல்வரை அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு !

அந்த வகையில் உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரில் 10 பேர் விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.

மேலும் மீதமுள்ள 20 பேர் ரயில் மூலம் நாளை சென்னை வரவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *