ஆந்திரா திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். மேலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
திருப்பதி கோவில் :
தற்போது ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மங்களகிரியில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் ஆந்திரா முதலவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களிடையே பேசிய சந்திரபாபு நாயுடு, கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின் போது திருப்பதி மலையில் புனிதத்தை கெடுத்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
இதனை தொடர்ந்து திருப்பதியில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் தயார் செய்ய கலப்படம் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தி தயார் செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் :
அந்த வகையில் முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதம் தயார் செய்ய விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாகவும் சந்திரபாபு நாயுடு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சென்னையில் பிரபல தியேட்டர்கள் சீல் வைப்பு – என்ன காரணம் தெரியுமா ?
அத்துடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் தரமான பொருட்களை பயன்படுத்தி பிரசாதங்கள் தயாரித்து வருவதாகக் கூறிய சந்திரபாபு நாயுடு,
மேலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதத்தில், விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றசாட்டியிருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகள் :
சென்னையில் பிரபல தியேட்டர்கள் சீல் வைப்பு
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தெலுங்கானா நடன இயக்குனர் சங்கத்தில் இருந்து ஜானி சஸ்பெண்ட்
தமிழகத்தில் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் ரத்து