இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டி 2024 ! இன்று முதல் தினசரி டிக்கெட் விற்பனை !இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டி 2024 ! இன்று முதல் தினசரி டிக்கெட் விற்பனை !

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் போட்டி 2024 தற்போது நடைபெறுகிறது. மேலும் இந்த போட்டியை காண இன்று முதல் தினசரி டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த வகையில் ரோகித் சர்மா தலைமையிலான அணி இந்த தொடரில் களமிறங்க உள்ளது.

இதன் அடிப்படையில் முதல்போட்டி இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது.

இதனை தொடர்ந்து இந்த போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும் மற்றும் ஜியோ சினிமா செயலியிலும் கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் – சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றசாட்டு !

இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் போட்டிகளை காண தினசரி டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. அந்த படி இன்று முதல் 23 ம் தேதி வரை தினசரி காலை 7 மணி முதல் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து ஒரு நாளுக்கு டிக்கெட் விலை ரூ.200 முதல் ரூ.1000 வரை நிர்ணயம் செய்யப்ட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *