ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு: கடந்த சில வருடங்களாக ஆழ்துளை கிணற்றில் சிறு குழந்தைகள் விழுந்து உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு
அந்த வகையில் ராஜஸ்தானின் டவுசா மாவட்டம் பாண்டூகி என்ற பகுதியில் நேற்று சரியாக மாலை 6 மணியளவில் 35 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்தார். rajasthan two and a half year old child
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மேலாண் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அக்குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Also Read: ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி திட்டம் – விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!
அதாவது, ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தைக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் சப்ளை கொடுக்கப்பட்ட நிலையில் 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த குழந்தைக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம்
மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி
மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்
கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை