தற்போது புதிய மதுபான கொள்கைக்கு ஆந்திரா அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதை தொடர்ந்து, அந்த வகையில் புதிய மாதுபான கொள்கையின்படி டெண்டர் மூலம் மாநிலம் முழுதும் உள்ள 3,746 மதுபான கடைகள் நடத்த தனியாருக்கு உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மதுபான கொள்கைக்கு ஆந்திரா அமைச்சரவை ஒப்புதல்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
புதிய மதுபான கொள்கை :
ஆந்திராவில் டெண்டர் மூலம் தனியாருக்கு மதுபான கடைகள் உரிமம் வழங்க வகையில் புதிய மதுபான கொள்கையை ஆந்திர அரசு இன்று (செப்.18) வெளியிட்டது.
அந்த வகையில் வரும் அக்.01 ம் முதல் இந்த புதிய மதுபான கொள்கை அமலுக்கு வருவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
தனியாருக்கு உரிமம் :
ஆந்திராவில் கடந்த ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் புதிய கலால் சட்டத் திருத்தத்தின் படி ஆந்திரா முழுவதும் உள்ள மதுக்கடைகளை மாநில அரசே நிர்வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை கைப்பற்றிய நிலையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.
அந்த வகையில் புதிய மதுபான கொள்கைக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து புதிய மதுபான கொள்கை வரும் அக்.01 ம் தேதி அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறைந்த விலையில் மதுபானங்கள் :
புதிய மதுபானக்கொள்கை அமல்படுத்தப்படுவதை தொடர்ந்து 180 ml அளவு கொண்ட மதுபானங்கள் ரூ.99 க்கு விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் புதிய மாதுபான கொள்கையின்படி டெண்டர் மூலம் மாநிலம் முழுதும் உள்ள 3,746 மதுபான கடைகள் நடத்த தனியாருக்கு உரிமம் வழங்கப்படும் எனவும்,
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் – சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றசாட்டு !
இதில் குறைவான விலை கொண்ட மதுபானங்கள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 12 நகரங்களில் பிரீமியம் கடைகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.