இன்று விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து (19.09.2024) ஏற்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலும், அத்துடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். Virudhunagar firecracker factory Explosion (19.09.2024)
விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து (19.09.2024)
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
விருதுநகர் :
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகில் செவல்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்தில் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தது மட்டுமல்லாமல் நிதியுதவி அறிவித்துள்ளார்.
தனியார் ஆலை வெடிவிபத்து :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் அப்பையநாயக்கன்பட்டி கிராமம் ஆகாஷ் நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் கோவிந்தராஜ் (வயது 27) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும் வெடி விபத்தில் சிக்கி நூறு சதவீத தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் குருமூர்த்தி (வயது 19) என்பவருக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
புதிய மதுபான கொள்கைக்கு ஆந்திரா அமைச்சரவை ஒப்புதல் – ரூ.99 க்கு விற்பனைக்கு வரும் என தகவல் !
நிவாரணம் அறிவிப்பு :
சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், நூறு சதவீத தீக்காயத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் குருமூர்த்திக்கு இரண்டு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவிர்த்துள்ளார்.
சமீபத்திய செய்திகள் :
தமிழக மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500
பாலியல் புகாரில் சிக்கிய நடன இயக்குநர் ஜானி கைது
சத்துணவு முட்டைகளை பயன்படுத்திய தனியார் உணவகத்திற்கு சீல்
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு
வேலூர் அரசுப்பள்ளியில் வளைகாப்பு ரீல்ஸ் வெளியிட்ட மாணவிகள்
ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி திட்டம்