TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. அதன்படி குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி அரசு ஊழியர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியானது. இதையடுத்து அரசாங்கத்தில் 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தம் 15.8 லட்சம் பேர் தேர்வை எழுதியுள்ளனர். tnpsc group 4 2024
TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்
இதனை தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி-யின் புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பொறுப்பேற்ற நிலையில் தேர்வு முடிவுகள் சீக்கிரம் வெளியாகும் என தெரிவித்தனர்.
அதன்படி, TNPSC குரூப் 4 தேர்வு முடிவுக்கான அக்டோபர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. tnpsc group 4 exam vacancy increas
Also Read: விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ல் தவெக முதல் மாநாடு – தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!
அதுமட்டுமின்றி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 6704 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தேர்வர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். மேலும் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், காலிப் பணியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம்
மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி
மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்
கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை