திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் - திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம் !திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் - திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம் !

ஆந்திரா மாநிலம் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ஆந்திரா மாநிலம் திருப்பதி கோயில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் தற்போது அதிகரித்து வருகின்றன.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று நடந்த என்.டி.ஏ சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,

கடந்த 5 ஆண்டு கால ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் (ஒய்.எஸ்.ஆர்) இருந்தபோது திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர் என்றும்,

புனிதமான திருமலை லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி மாசுபடுத்தியுள்ளனர் என்றும் பரபரக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

மேலும் இந்த திருப்பதி கோவில் லட்டு விவகாரம் பெரும் சர்ச்சைகளைக் ஏற்படுத்தியுள்ள நிலையில்,

அந்த வகையில் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது குறித்து ‘தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனம்’ ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தது.

இதனையடுத்து அந்த ஆய்வில் மீன் எண்ணெய், சோயா பீன், சூரிய காந்தி எண்ணெய், விலங்குக் கொழுப்பு உள்ளிட்டவை திருப்பதி லட்டில் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை தற்போது ஏற்படுத்தியிருக்கிறது.

அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது. அதன் படி எங்களது நெய்யின் தரத்தை உறுதி செய்ய எந்த ஆய்வுக்கும் உட்படுத்த தயார் என்றும்,

விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ல் தவெக முதல் மாநாடு – தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

மேலும் திருப்பதி தேவஸ்தானம் எழுதிய கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக பதில் அளித்து வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருப்பதி லட்டு தயாரிக்க தரமற்ற நெய் வழங்கியதாக கூறி தடை செய்யப்பட்ட பட்டியலில் வைக்கப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *