சென்னையில் அடுத்தடுத்து பிரியாணி கடைகளுக்கு சீல் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !சென்னையில் அடுத்தடுத்து பிரியாணி கடைகளுக்கு சீல் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !

தற்போது சென்னையில் அடுத்தடுத்து பிரியாணி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொடுங்கையூர் எஸ்எஸ் ஐதராபாத் பிரியாணி கடைக்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Chennai Kodunkaiyur SS Hyderabad Biryani Shop Sealed

தற்போது தமிழகத்தில் தொடர்ச்சியாக பிரியாணி கடைகளில் தரமற்ற பிரியாணி மாற்றும் கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்தப்படுவதாகவும் இதனை உடல்நல கோளாறு ஏற்படுவதாகவும் அடுத்தடுத்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டல்களில் சென்று நேரடியாகவே ஆய்வுகளை மேற்கொண்டனர். அத்துடன் கொடுக்கப்பட்ட புகார்கள் உண்மையானால், தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சென்னையில் மிகவும் பாப்புலரான அப்பு கடை பிரியாணி தரமற்று இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று சென்னையின் பிரபல அசைவ ஓட்டல்களில் ஒன்றான எஸ்எஸ் பிரியாணி ஹோட்டலும் தற்போது இந்த பிரச்சனையில் சிக்கியுள்ளது. மேலும் SS ஹைதராபாத் பிரியாணிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

வார இறுதி நாட்களிலும், விசேஷ நாட்களிலும் பிரியாணி உள்பட அசைவ உணவுகள் இந்த கடையில் வாங்க கூட்டம் அலைமோதும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் எஸ்எஸ் பிரியாணியின் கொடுங்கையூர் கிளையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என்றும் அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர்,

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் – திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம் !

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததுடன்,

இதனை விசாரிக்க கொடுங்கையூர் எஸ்எஸ் ஐதராபாத் பிரியாணி கடைக்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *