இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் -  அரசு போட்ட அதிரடி உத்தரவு!இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் -  அரசு போட்ட அதிரடி உத்தரவு!

கர்நாடகாவில் நந்தினி நெயில் தான் பிரசாதம்: உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று தான் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில். இங்கு எல்லோருக்கும் பிடித்தது லட்டு தான். ஒருவருக்கு இரண்டு லட்டுகள் பிரசாதமாக கொடுத்து வருகின்றனர்.

கர்நாடகாவில் நந்தினி நெயில் தான் பிரசாதம்

இப்படி இருக்கையில் சில நாட்களுக்கு முன்னர் அந்த லட்டை சோதனை செய்து பார்த்ததில் அதில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் கர்நாடக அரசு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதாவது இனி அனைத்து கோயில்களிலும் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்தி பிரசாதம் தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த நெயில் எந்தவித விலங்கு கொழுப்பும் கலக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

Also Read: Ind vs Ban: டெஸ்ட் கிரிக்கெட் 2024 – 700 நாட்களுக்கு பிறகு சதம் விளாசிய ரிஷப் பண்ட்!

மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிட்டத்தட்ட 35 ஆயிரத்து 500 கோயில்களிலும் பிரசாதம் தயாரிப்பதற்கு நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி கோவில்களில் பக்தர்கள் விளக்கு ஏற்றுவதற்கு, இதர சடங்குகளுக்கும் செய்வதற்கும் நந்தினி நெய் தான் பயன்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.  

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம் 

மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி

மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்

கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *