அமெரிக்காவில் பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை - இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதி !அமெரிக்காவில் பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை - இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதி !

அமெரிக்காவில் பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் அப்போது பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும், 40,000 பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். PM Modi talks with Palestinian President Mahmoud Abbas in America

இதனையடுத்து ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல் அறிவித்த நிலையில் அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது.

மேலும் சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன இருப்பினும் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றினார். Palestinian President Mahmoud Abbas

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமனம் – முழு தகவல் இதோ !

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அப்போது பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

அத்துடன் அவர் காசாவில் நடக்கும் துயர சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும், காசா-இஸ்ரேல் இடையேயான போரில் பேச்சுவார்த்தை மூல தீர்வு காண வேண்டுமென்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *