"Jack Sparrow" ஜானிடெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - ரசிகர்கள் வாழ்த்து மழை!"Jack Sparrow" ஜானிடெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - ரசிகர்கள் வாழ்த்து மழை!

“Jack Sparrow” ஜானிடெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: ஹாலிவுட் படம் என்றாலே நமக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு காட்சிகளும் பிரமாண்டமாக இருக்கும். இன்னும் சொல்ல போனால் ஒரு சீனுக்காக ௧௦௦ கோடி வரை செலவு செய்வார்களாம். அப்படி ஹாலிவுட்டில் பல சூப்பர் நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த 2003-ல் வெளியான தி பைரேட் ஆப் தி கரீபியன் படத்தில் பிரபலமானவர் தான் ஜானி டெப்.

“Jack Sparrow” ஜானிடெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

அந்த படத்தில் அவர் நடித்த ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த படத்தின் எல்லா பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் அவர் நடிகை ஆம்பர் ஹெட்டை 2015-ல் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் அவர்களுக்கு தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இவர் நடிப்பையும் தாண்டி ஒரு சில படங்களை இயக்கியும் உள்ளார். அதன்படி அவர் கடந்த 1997-ல் தி பிரேவ் படத்தை இயக்கி இருந்தார்.

Also Read: செம டுவிஸ்டுடன் வெளியான கார்த்தியின் மெய்யழகன் பட டிரைலர் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சமீபத்தில் கூட இவரது  இயக்கத்தில் ‘மோடி- திரி டேஸ் ஆன் தி விங் ஆப் மேட்னஸ்’ என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஜானிடெப் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர்  இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறும் ரோம் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. jack sparrow Johnny Depp

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ

இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா?

எந்த ஒரு கெட்ட பழக்கம் இல்லாமல் வாழும் 6 ஹீரோக்கள்

மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *