குக் வித் கோமாளி ஷோ புதிய ஆங்கர்? சபாஷ் சரியான போட்டி - வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி!குக் வித் கோமாளி ஷோ புதிய ஆங்கர்? சபாஷ் சரியான போட்டி - வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி!

குக் வித் கோமாளி ஷோ புதிய ஆங்கர்: பொதுவாக ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன சேனல் என்றால் அது விஜய் டிவி தான். அதிலும், எத்தனையோ ஷோக்கள் இருந்தாலும் கூட மக்களுக்கு மிகவும் பிடித்த ஷோ தான் குக் வித் கோமாளி. மக்களின் வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 4 சீசன்கள் முடிந்து தற்போது சீசன் 5 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீசனில் பல மாற்றங்கள் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக இந்த ஷோவில் புதிய தொகுப்பாளராக மணிமேகலை களமிறங்கினார்.

தற்போது இந்த ஷோ பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஏதோ ஒரு காரணத்திற்காக மணிமேகலை ஷோவை விட்டு வெளியேறினார்.

குக் வித் கோமாளி ஷோ புதிய ஆங்கர்

அவர் வெளியேறிய விஷயம் இணையத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். எனவே இந்த பிரச்சினைக்கு பிறகு ரக்‌ஷன் மட்டுமே ஷோவை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் விஜய் டிவி நிர்வாகம் ஒரு புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த நிகழ்ச்சிக்கு புது ஆங்கர் வரவிருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளது.

Also Read: “Jack Sparrow” ஜானிடெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது – ரசிகர்கள் வாழ்த்து மழை!

அதில் அடுத்து புதிய ஆங்கர் வரப் போறாங்க. அந்த ஆங்கர் உங்களுக்கு தெரிந்தவராக இருக்கலாம். அல்லது தெரியாதவராக கூட இருக்கலாம். இல்லனா மனதுக்கு பிடித்தவராக கூட இருக்கலாம் என ட்விஸ்ட் வைத்துள்ளார்கள். இருந்தாலும் ரசிகர்கள் ஏஞ்சலின் வந்தால் நன்றாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.  இவர் ஏற்கனவே ஜோடி ஆர் யூ ரெடி ஷோவை தொகுத்து வழங்கி வரவேற்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ

இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா?

எந்த ஒரு கெட்ட பழக்கம் இல்லாமல் வாழும் 6 ஹீரோக்கள்

மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *