திருப்பதி கோவில் லட்டு விவகாரம் - தோஷம் நீங்க தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!திருப்பதி கோவில் லட்டு விவகாரம் - தோஷம் நீங்க தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!

திருப்பதி கோவில் லட்டு விவகாரம்: திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்து வந்தது. எனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

திருப்பதி கோவில் லட்டு விவகாரம்

மேலும் லட்டில் விலங்கு கொழுப்பு சேர்ந்ததால் திருப்பதி கோவில் தீட்டு பட்டுவிட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து வந்தது. எனவே இந்த பாவத்தை கழுவ வேண்டும் என்பதால் அடுத்த 11 நாள் கடும் தவம் இருக்க போவதாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி,  லட்டு தயாரிக்கும் இடத்தை சுத்தப்படுத்தி விட்டு, மகா சாந்தி யாகம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. tirupati devasthanam

Also Read: சிறுமியை பாலியல் வன்கொடுமையிலிருந்து மீட்ட குரங்குகள் – அதிசயம் ஆனால் உண்மை!

அதாவது, செப் 23-ம் தேதி இன்று மாலை 6 மணிக்கு ஏழுமலையான் பக்தர்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி ‘ஓம் நமோ நாராயணாய.. ஓம் நமோ பகவதே வாசுதேவாய.. ஓம் நமோ வெங்கடேசாய’ என்று மந்திரங்களை உச்சரித்து வழிபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம்

சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க்

இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் –  அரசு போட்ட அதிரடி உத்தரவு!

கல்யாணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக செல்லும் ஆண்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *