கலப்பட சர்ச்சையை தொடர்ந்து திருப்பதிக்கு நெய் ஏற்றி செல்லும் லாரிகளில் GPS கருவி பொறுத்தப்பட்டுள்ளதாக நந்தினி நெய்யை சப்ளை செய்யும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது.
திருப்பதிக்கு நெய் ஏற்றி செல்லும் லாரிகளில் GPS கருவி
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
திருப்பதி லட்டு விவகாரம் :
கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட நெய் சேர்க்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
இந்த சம்பவம் ஆந்திரா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
நந்தினி நெய் :
அந்த வகையில் கே.எம்.எப், எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் நந்தினி நெய்யை, திருப்பதி கோவில் நிர்வாகம் லட்டு தயாரிப்பிற்காக வாங்குகிறது. அந்த வகையில் மாட்டுக் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட நெய் விவகாரம் சர்ச்சையான நிலையில் தற்போது நந்தினி நெய்க்கு கடும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் கூடுதலாக மூன்று டேங்கர் நெய் வினியோகிக்கும்படி, கே.எம்.எப்பிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளது.
கூடுதல் நெய் விநியோகம் :
இதனை தொடர்ந்து ஒரு டேங்கரில் 20,000 கிலோ நெய் அனுப்பப்படுகிறது. தற்போது கூடுதலாக 60,000 கிலோ நெய் சப்ளை செய்யும்படி திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு – குற்றவியல் வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு !
லாரிகளில் GPS கருவி பொருத்தம் :
நந்தினி நெய் கொண்டு செல்லும் டேங்கர்களுக்கு GPS சாதனம், ஸ்கேனர் லாக் போன்ற வசதிகள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும், இங்கு ஒரு முறை லாக் செய்யப்பட்டால் திருப்பதி கோவிலில் தான் திறக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் வாகனத்தின் லாக்கை திறக்க வேண்டும் என்றால் பாஸ்வேர்டு கட்டாயம். டேங்கரில் உள்ள QR code ஐ ஸ்கேன் செய்து திறக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் GPS சாதனம் பொருத்தி இருப்பதால் டேங்கர் எங்கு செல்கிறது எங்கு நிற்கிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இதனால் நெய்யில் கலப்படம் நடக்காமல் தடுக்க உதவும்.