Home » சினிமா » 10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்.. வெளியான தரமான அப்டேட்!

10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்.. வெளியான தரமான அப்டேட்!

10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்.. வெளியான தரமான அப்டேட்!

சினிமாவில் கலக்கி வரும் நடிகர் அஜித்குமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்

தென்னிந்திய தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தல அஜித் பைக் மற்றும் கார்கள் மீது அலாதியான காதல் கொண்டவராக இருக்கிறார்.

அதுமட்டுமின்றி அவர் பைக் ரேஸில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளார். F3 போன்ற கார் பந்தயங்களில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2010 க்கு பிறகு அவர் எந்த ஒரு பைக் ரேஸில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் அடுத்த வருடம்  2025-ம் ஆண்டு துபாயில் கார் பந்தயம் நடக்க இருப்பதாக கார் ரேசர் நரேன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Also Read: இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் மீது வழக்கு – அதிரடியாக புகார் கொடுத்த மனைவி!

எனவே இந்த பந்தயத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜித் தற்போது மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அதற்கான தீவிர பயிற்சியில் நடிகர் அஜித் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் சினிமாவை விட்டு போவதாக அறிவித்த நிலையில், தற்போது அஜித்தும் கார் பந்தயத்திற்கு செல்வதால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ

இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா?

எந்த ஒரு கெட்ட பழக்கம் இல்லாமல் வாழும் 6 ஹீரோக்கள்

மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top