தற்போது தமிழக பள்ளிகளுக்கு காலாண்டுத்தேர்வு விடுமுறை நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று விடுமுறை நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளுக்கு காலாண்டுத்தேர்வு விடுமுறை நீட்டிப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
காலாண்டு தேர்வு :
தமிழ்நாட்டில் பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகளுக்கு செப்.19ம் தேதியும் 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு செப்.20ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கியது.
அந்த வகையில் வருகிற 27ந்தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) காலாண்டு தேர்வினை முடிக்கும் வகையில் காலாண்டு தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு தற்போது தேர்வு நடைபெறுகிறது.
ஆசிரியர் சங்கம் கோரிக்கை :
நடைபெற்று வரும் காலாண்டு தேர்வு முடிந்ததும் வருகிற 28ந்தேதி (சனிக்கிழமை) முதல் 2ந்தேதி (புதன்கிழமை) வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது என்றும், இதையடுத்து காலாண்டு விடுமுறைக்குப் பின்னர் வருகிற அக்டோபர் 3ந்தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பள்ளி விடுமுறை நாட்களை நீடிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன . இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் பணியிட மாற்றம் – பளிச்சென்று லிப்ஸ்டிக் போட்டது தான் காரணமா ?
காலாண்டு விடுமுறை நீட்டிப்பு :
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆசிரியர்கள் கோரிக்கைக்கு ஏற்ப 9 நாட்கள் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 7ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள் :
இலவச தையல் இயந்திரம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
பிக்பாஸ் செட் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்து
விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா?
பிரபல யூடியூபரான ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு