தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும் என்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 4 டிகிரி செல்சியஸ் உயரும்
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை செப் 25 முதல் செப் 29-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கும்.
Also Read: பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்க தடை – ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
அதே போல் செப் 30ம் தேதி மற்றும் 1ம் தேதி புதுவை மற்றும் காரைக்கால் இடங்களில், லேசானது முதல் மிதமான மழை கொட்டி தீர்க்கும். தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அதாவது (இன்று மற்றும் நாளை) ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் வெயிலில் வெளியே வரவேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
நெய்யில் கலப்படம் செய்தது உறுதி – கேரளாவில் 3 நிறுவனங்களுக்கு தடை
இலவச தையல் இயந்திரம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை – எப்போது தெரியுமா?
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா