தற்போது செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்த உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்த உச்சநீதிமன்றம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி :
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் :
இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாகச் சிறையில் உள்ள முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த ட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு மற்றும் அமலாக்கத்துறை தரப்பு என இரு தரப்பிற்கும் இடையே காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதியைக் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம் சுமார் 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியில் வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் தவெக முதல் மாநாடுக்கு 17 நிபந்தனைகள் கிடுக்கிப்பிடியுடன் அனுமதி வழங்கிய போலீஸ்!
உச்சநீதிமன்றம் நிபந்தனை :
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளை வழங்கியுள்ளது.
அதன் படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாரம் தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும்.
மேலும் 25 லட்சம் ரூபாய்க்கான சொந்த பிணை தொகையை வழங்க வேண்டும்.
இதனையடுத்து அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மாலை அல்லது நாளை சிறையில் இருந்து வெளியே வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.