தற்போது மத்திய அரசு சார்பில் தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஏலம் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஏலத்தில் ONGC மற்றும் வேதாந்தா நிறுவனத்திடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஏலம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஏலம் :
தமிழகத்தை ஒட்டியுள்ள ஆழ்கடல் பகுதிகளில் மத்திய எரிசக்தி இயக்குநரகம் சார்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மத்திய அரசு சார்பில் ஏலம் விட்டுள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரிக்கு தெற்கு கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஏலம் விடப்பட்டுள்ளது. competition between ONGC and Vedanta Bidding for oil in Tamilnadu deep sea area
மேலும் தமிழ்நாடு ஆழ்கடல் பகுதியில் 4 வட்டாரங்கள் உட்பட நாடு முழுவதும் 28 வட்டாரங்களில் எண்ணெய் எடுக்க இந்த ஏலம் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விருப்பமான இடங்களுக்கு விண்ணப்பிக்க சர்வதேச நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ONGC மற்றும் வேதாந்தா நிறுவனத்திடையே போட்டி :
அந்த வகையில் தமிழக ஆழ்கடல் பகுதியில் 4 வட்டாரங்கள் உட்பட நாடு முழுவதும் 28 வட்டாரங்களில் 1,36,596 சதுர கிலோமீட்டர் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, சென்னை என 4 இடங்களில் மொத்தமாக 32485.29 சதுர கிலோமீட்டர் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு, ஒற்றை அனுமதி முறையில் ஏலம் விடப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்த உச்சநீதிமன்றம் – அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை என தகவல் !
அந்த வகையில் தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ONGC மற்றும் வேதாந்தா நிறுவனத்திடையே போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து சர்வதேச அளவிலான ஏலத்தில் தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ONGC மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.