தமிழகத்தில் இன்று மற்றும் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஓரிரு பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர் நிலையங்கள் இருக்கும் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வர இருக்கும் நிலையில், இன்னும் சில நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க இருக்கிறது. இதனால் ஓரிரு பகுதியில் வெயில் வெளுத்து வாங்கினாலும் கூட ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய கூடும்.
Also Read: பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் போலியானவை – CDSCO வெளியிட்ட ஷாக்கிங் லிஸ்ட்!
இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ” மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை செப் 27 ஆம் தேதி விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதிய ரேஷன் கார்டு வாங்குவோருக்கு ஜாக்பாட் – வெளியான குட் நியூஸ்!
471 நாட்களுக்கு பின் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்
விஜய்யின் தவெக முதல் மாநாடுக்கு கிடுக்கிப்பிடியுடன் அனுமதி
தமிழ்நாட்டில் 4 டிகிரி செல்சியஸ் உயரும்