திருப்பதியில் பிற மதத்தினர் வழிபட புதிய வழிமுறை - திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு !திருப்பதியில் பிற மதத்தினர் வழிபட புதிய வழிமுறை - திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு !

தற்போது திருப்பதியில் பிற மதத்தினர் வழிபட புதிய வழிமுறை நடைமுறை படுத்தப்பட இருப்பதாக திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான திருப்பதியில் கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு பக்தர்களுக்கு தரப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்படுவதாக ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றசாட்டை எழுப்பினர். அந்த வகையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு கடந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசின் மீது குற்றசாட்டு எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து திருப்பதிக்கு நெய் வழங்கும் நிறுவனத்திடம் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒருவழியாக திருப்பதி லட்டு விவகாரம் ஓய்ந்துள்ள நிலையில், அந்த வகையில் திருமலையில் பிற மதத்தினர் வழிபட புதிய நடைமுறையை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. Tirumala Devasthanam announces a new way for people of other faiths to worship in Tirupati

பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் போலியானவை – CDSCO வெளியிட்ட ஷாக்கிங் லிஸ்ட்!

இதனை தொடர்ந்து ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பும் வேற்று மதத்தினர், தனக்கு முழு நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அதில் கையொப்பம் இட்டு அளிக்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *