Home » செய்திகள் » பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகார் – லட்டு பாவங்கள் வீடியோவால் நடவடிக்கை !

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகார் – லட்டு பாவங்கள் வீடியோவால் நடவடிக்கை !

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகார் - லட்டு பாவங்கள் வீடியோவால் நடவடிக்கை !

பிரபல பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகார் ஆந்திரா போலீசில் தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்ட லட்டு பாவங்கள் என்ற வீடியோவால் இந்துக்களின் உணர்வுகளை அவமதித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம் ஆந்திரா மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பிரபல யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் இணைந்து நடத்தி வரும் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியானது. ஆனால் வெளியான சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது.

இதனையடுத்து லட்டு பரிதாபங்கள் வீடியோ நீக்கப்பட்டது தொடர்பாக பரிதாபங்கள் யூடியூப் சேனலின் எக்ஸ் பக்கத்தில் இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டது.

அவ்வாறு அந்த பதிவில், கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளியான லட்டு பரிதாபங்கள் வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. மேலும் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை.

அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கியுள்ளோம். அத்துடன் இதுபோல் வரும் காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

திருப்பதியில் பிற மதத்தினர் வழிபட புதிய வழிமுறை – திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு !

இந்நிலையில் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இருந்து வீடியோ நீக்கப்பட்டிருந்தாலும், சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பலரும் தற்போது பகிர்ந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மீது ஆந்திர டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் அமர் பிரசாத் ரெட்டி புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், ‘லட்டு பாவங்கள்’ என்ற பெயரில் வெளியான வீடியோவை நீக்கியிருந்தாலும் இந்த வீடியோவால் இந்துக்களின் உணர்வுகளை அவமதித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் ஆந்திர முதல்வர் மற்றும் துணை முதல்வரை இழிவுபடுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top