
நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வை டி.என்.பி.எஸ்.சி நடத்தியது.
மேலும் இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 2327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அத்துடன் இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 507 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 1820 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு :
இதனை தொடர்ந்து குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு செப்டம்பர் 23 ஆம் தேதி தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வாயிலாக வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !
இந்தநிலையில் குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அத்துடன் முதன்மைத் தேர்வுகள் 2025 பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தேர்வாணையம் குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில் குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள காரணத்தால் தேர்வர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.