அக்டோபரில் தமிழக அமைச்சரவை மாற்றம் ? - செந்தில் பாலாஜி அமைச்சராக வாய்ப்பு !அக்டோபரில் தமிழக அமைச்சரவை மாற்றம் ? - செந்தில் பாலாஜி அமைச்சராக வாய்ப்பு !

வரும் அக்டோபரில் தமிழக அமைச்சரவை மாற்றம் ? செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இரண்டு அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிய நபர்கள் அமைச்சராக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. tn cabinet reshuffle in first week of October

தற்போது தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்வது தொடர்பான அறிவிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் அமைச்சரவை மாற்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரும் இடம்பெறும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து முதலமைச்சர் டெல்லி பயணத்திற்குப்பின் அமைச்சரவை மாற்றம் பற்றி அறிவித்து பதவியேற்புக்கான நிகழ்ச்சியை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் அக்டோபர் முதல் வாரத்தில் செய்யப்பட உள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயத்தில் 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக 2 அமைச்சர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. Senthil Balaji likely to be given ministerial post and Udayanidhi as deputy chief minister

பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு – நிலுவைத் தொகைகளை விடுவிக்க கோரிக்கை !

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அவர் வகித்து வந்த மின்சாரத்துறை மீண்டும் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் ஆவடி நாசர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *