தீபாவளி பண்டிகை 2024 - 5975 சிறப்பு ரயில்கள் - மத்திய அமைச்சர் அறிவிப்பு..!தீபாவளி பண்டிகை 2024 - 5975 சிறப்பு ரயில்கள் - மத்திய அமைச்சர் அறிவிப்பு..!

தீபாவளி 2024 பண்டிகை நாளை முன்னிட்டு 5,975 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை 2024

தமிழர்கள் வருடந்தோறும் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. அந்த வகையில் இந்த வருடம் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இந்த பண்டிகையை வீட்டோடு கொண்டாட விரும்பும் வெளியூரில் உள்ள மக்கள் தனது சொந்த ஊருக்கு செல்ல விரும்புவார்கள்.

எனவே இதனை கருத்தில் கொண்டு ரயில்வே அமைச்சகம் சிறப்பு ரயில்களை இயக்க இருக்கிறது. அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் கிட்டத்தட்ட 5,975 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Also Read: Ind Vs Ban :கான்பூர் டெஸ்ட் போட்டி 2024: குறுக்கே வந்த மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து!

அதுமட்டுமின்றி அந்த சிறப்பு ரயில்களில் கிட்டத்தட்ட 108 ரயில்களில் முன்பதிவின்றி செல்லக் கூடிய  பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே இந்த ரயில்கள் மூலம் சுமார் ஒரு கோடி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும் என்று தெரிவித்தார். எனவே மக்கள் முன்பதிவு செய்து  தங்களுக்கு சொந்த ஊருக்கு செல்லலாம். 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் எப்போது?

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

மோஹித் சர்மாவை கெட்ட வார்த்தையில் திட்டிய தோனி

பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் போலியானவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *